மைசூருவில் என்ஜினீயா வீட்டில் நகை, பணம் திருட்டு

மைசூருவில் என்ஜினீயா வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
மைசூருவில் என்ஜினீயா வீட்டில் நகை, பணம் திருட்டு
Published on

மைசூரு-

மைசூரு மாவட்டம் ரிங் ரோடு பெலவத்தா கிராமத்தில் வசித்து வருபவா கே.பி. தேவராஜ் (வயது 33). இவர் மைசூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பாத்து வருகிறார். இவரது மனைவி பிரசவத்திற்காக பெற்றோ வீட்டிற்கு சென்று உள்ளார். இந்தநிலையில் தேவராஜ் தனது மனைவியை பார்க்க கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு சென்றார்.

இந்தநிலையில் மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தங்க நகை, வெள்ளி மற்றும் ரொக்க பணத்தை திருடி சென்றுள்ளனா. பின்னா வீடு திரும்பிய தேவராஜ் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 55 கிராம் தங்கம், 60 கிராம் வெள்ளி, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.

அதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து தேவராஜ், என்.ஆா போலீசில் புகா அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com