புதிய இந்தியாவில் குடும்பப் பெயர்கள் முக்கியமில்லை, திறமை மட்டுமே முக்கியம் : பிரதமர் மோடி

கொச்சியில் நடைபெற்ற மாநாட்டில் 'புதிய இந்தியா' பற்றி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
புதிய இந்தியாவில் குடும்பப் பெயர்கள் முக்கியமில்லை, திறமை மட்டுமே முக்கியம் : பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

கேரளாவில் உள்ள கொச்சியில் பிரபல மலையாள நாளிதழ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸிங் வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

இது புதிய இந்தியா, இங்கு இளைஞர்களின் குடும்பப் பெயர்கள் முக்கியமில்லை, தங்களுக்காக தனி பெயரை உருவாக்கும் திறமையே முக்கியம். புதிய இந்தியா குறிப்பிட்ட சிலரை பற்றியது அல்ல, ஒவ்வொரு இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டது. புது இந்தியாவில் யாராக இருந்தாலும் ஊழலுக்கு அனுமதில்லை. என்று கூறிய மோடி,

மேலும், இதற்கு முன்பெல்லாம் ஒருவர் எங்கிருந்து வருகிறார், அவரது பின்புலம் என்ன? என்பதை பொருத்தே அவரது வெற்றி அமைந்தது, ஆனால் புது இந்தியாவில் திறமை மட்டுமே வெற்றியை தரும். இங்கு எல்லோரும் எல்லாவற்றிற்கும் உடன்படவில்லை என்றாலும், வெவ்வேறு தரப்புகளில் ஒருவருக்கொருவர் தங்களது கருத்துகளை பரிமாறும் அளவுக்கு நாகரிகம் இருக்கும். புதிய இந்தியாவில் ஒருவரின் தனிப்பட்ட சிந்தனை தவிர்த்து, தனிநபர்களுக்கும், அமைப்புகளுக்கும் இடையே பரஸ்பர நிலைப்பாடு இருக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com