

புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்ட சபைக்கும் தேர்தல் நடந்தது. அங்கு நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி 122 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
இந்தநிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 49 சதவீதம் பேர் குற்ற வழக்கில் தொடர்பு உடையவர்கள் என தெரியவந்துள்ளது. அதாவது மொத்தம் உள்ள 146 எம்.எல்.ஏ.க்களில் 67 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுவும் 49 மீது பேர் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் போன்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 46 மீதும், பா.ஜ.க.வில் 14 பேர், காங்கிரசில் 6 பேர், பிற கட்சியை சேர்ந்த ஒருவர் மீதும் குற்ற வழக்கு உள்ளது.