உத்தரகாண்ட்: பார்வதி குண்ட் கரையில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு

உத்தரகாண்டில் ஆதி கைலாஷ் தரிசனத்தை முடித்துக்கொண்டு, பார்வதி குண்ட் கரையில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார்.
உத்தரகாண்ட்: பார்வதி குண்ட் கரையில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு
Published on

ராஞ்சி,

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பிதோரகர் பகுதியில் 4,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்கு முன்னதாக, ஜோலிங்காங்கில் உள்ள பார்வதி குண்ட் கரையில் அமைந்துள்ள சிவன்-பார்வதி கோயிலில் பழங்குடியினரின் பாரம்பரிய உடையை அணிந்து, தலைப்பாகையுடன் உடுக்கை இசைத்து, சங்கு ஊதியும், ஆரத்தி பூஜையில்  பங்கேற்றார்.

பிரதமர் மோடியுடன் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியும் கலந்துகொண்டார். கோயில் அர்ச்சகர்களான வீரேந்தி குடியால் மற்றும் கோபால் சிங் ஆகியோர் பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும், ஜோலிங்காங்கில் உள்ள ஆதி கைலாஷ் சிகரத்தின் முன் கைகளைக் கட்டிக்கொண்டும் சிறிது நேரம் தியானத்திலும் பிரதமர் மோடி ஈடுபட்டார். இந்தியா-சீனா எல்லையில் உள்ள ஆதி கைலாஷ் மலைக்கு சென்ற நாட்டின் முதல் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சீனாவின் எல்லை தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com