குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில், அரசு தரப்பு மோசமாக தேல்வியடைந்துள்ளது 2 ஜி வழக்கில் நீதிபதி தீர்ப்பு

குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில், அரசு தரப்பு மோசமாக தேல்வியடைந்துள்ளது என 2 ஜி வழக்கில் நீதிபதி ஓ.பி.சைனி கூறி உள்ளார்.
குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில், அரசு தரப்பு மோசமாக தேல்வியடைந்துள்ளது 2 ஜி வழக்கில் நீதிபதி தீர்ப்பு
Published on

புதுடெல்லி

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கபட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க மாநிலங்களவை எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வந்தடைந்தனர். சுப்பிரமணியன் சுவாமியும் நீதிமன்றம் வந்தடைந்தார். பாட்டியாலா நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. நீதிமன்ற வளாகத்தில் தி.மு.க தொண்டர்களும் குவிந்துள்ளனர். காலை 10.30 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டது.

6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கபட்டது. 2 ஜி அலைக்கற்றை முறை கேடு வழக்கில் இருந்து ஆ.ராசா- கனிமொழி உள்பட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ, அமலாக்கத்துறை தவறிவிட்டது என நீதி மன்றம் கூறி உள்ளது.

டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கூறியதாவது:-

2ஜி வழக்கில் சரியான ஆதாரங்களுடன் வருவார்கள் என 7 வருடம் காத்திருந்தேன். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கோடை விடுமுறையில் கூட நீதிமன்றம் வந்தேன். அரசு தரப்பு குற்றசாட்டுகளை நிருபிக்க தவறி விட்டது.

தனியார் டிவிக்கு ரூ.200 கோடி பெறப்பட்டதா என்ற கேள்விக்கு இடமில்லை.

தனியார் தொலைக்காட்சி வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும்.

2 ஜி வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத பட்சத்தில், அதனை சார்ந்த தனியார் தொலைக்காட்சி வழக்கும், குற்றச்சாட்டுகளுக்கு ஏற்புடையதல்ல .

குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில், அரசு மோசமாக தேல்வியடைந்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடைமுறையில் குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை.

அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை மாற்ற நிதிச்செயலாளர் மற்றும் டிராய் பரிந்துரை செய்தார்கள் என அரசு குற்றப்பத்திரிகையில் கொடுத்த தகவல் பொய்யானது.

அரசு ஆவணங்களை, தவறாக புரிந்து கொண்டதன் அடிப்படையில் தான், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை. குற்றப்பத்திரிக்கையை தயார் செய்ய எடுத்துக் கொண்ட அக்கறையை அதை நிரூபிப்பதில் காட்டவில்லை.

சிபிஐபிடம் வாக்கு மூலம் அளித்தவர்கள் நீதிமன்றத்தில் முரண்பட்ட தகவலை தெரிவித்தனர் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com