புனே மாவட்டத்தில், இந்த மாத இறுதிக்குள் மேலும் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் - சுகாதாரத்துறை கணிப்பு

புனே மாவட்டத்தில் இந்த மாத இறுதிக்குள் மேலும் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சுகாதாரத்துறை கணித்து உள்ளது.
புனே மாவட்டத்தில், இந்த மாத இறுதிக்குள் மேலும் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் - சுகாதாரத்துறை கணிப்பு
Published on

புனே,

இது குறித்து புனே மண்டல கமிஷனர் சவுரப் ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புனே மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 82 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இறப்பு விகிதம் 2.30 சதவீதமாக உள்ளது.

இந்த மாத இறுதிக்குள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டும் என்று சுகாதாரத்துறையினரால் கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த காலக்கட்டத்துக்குள் மேலும் 50 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவார்கள்.

புனே கோப் என்ஜினீயரிங் கல்லூரியில் பிரமாண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் பணிகள் வருகிற 20-ந்தேதி நிறைவு பெறும். இதேபோல மற்றொரு சிகிச்சை மையம் பிம்ரி சிஞ்ச்வாட்டில் அமைய உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com