பஞ்சாப்பில் காரில் தப்பிய கொள்ளைக்காரனை 15 கி.மீ. தூரம் துரத்தி சென்று பிடித்த போலீசார்

பஞ்சாப்பில் காரில் தப்பிய தேடப்பட்டு வந்த கொள்ளைக்காரனை போலீசார் 15 கி.மீ. தூரம் துரத்தி சென்று பிடித்து உள்ளனர்.
பஞ்சாப்பில் காரில் தப்பிய கொள்ளைக்காரனை 15 கி.மீ. தூரம் துரத்தி சென்று பிடித்த போலீசார்
Published on

சங்ரூர்,

பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்டத்தில் சுனம் பகுதியில், போலீசாரால் தேடப்பட்டு வந்த கொள்ளைக்காரன் ஜஸ்பிரீத் பப்பி (வயது 32). போலீசாரை கண்டதும் தப்பியோடிய பப்பியை 15 கி.மீ. தூரம் துரத்தி சென்று போலீசார் பிடித்து உள்ளனர்.

இதன்பின் பப்பியிடம் விசாரித்ததில் ஹுண்டாய் ரக கார் ஒன்றை திருடி அதில் பயணித்தது தெரிய வந்தது. கடந்த 11 ஆண்டுகளாக குற்ற செயல்களில் ஈடுபட்டு 17 வழக்குகளில் தேடப்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

போலீசார் பப்பியிடம் இருந்து நான்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் திருடப்பட்ட காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com