ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த மாதிப்பு எண்ணிக்கை 98,116 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,199 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 80,490 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 16,427 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com