உல்லாசமாக இருக்க ஒரே நேரத்தில் 2 வயாகரா பின்னர் செய்த தவறால் உயிரிழப்பு....!

இருவரும் மதுவும் அருந்தி இருவரும் நெருக்கமாக இருந்தபோது அவருக்கு மயக்கம் ஏற்பட்டு சரிந்துள்ள தகவல் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
உல்லாசமாக இருக்க ஒரே நேரத்தில் 2 வயாகரா பின்னர் செய்த தவறால் உயிரிழப்பு....!
Published on

மும்பை

மராட்டிய மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் (வயது 41) ஒரு ஓட்டல் அறையில் மயங்கி கிடப்பதாக அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு வந்தது. அதனி தொடர்ந்து அங்கு விரைந்த ஆம்புலன்ஸ் மூலம் மயங்கி கிடந்த தொழிலதிபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த தொழிலதிபர் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீஸ்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது அந்த தொழிலதிபருடன் ஒரு பெண் ஓட்டல் அறையில் தங்கியிருந்தது தெரியவந்தது. அதன் பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் நெருக்கமாக இருக்க அந்த தொழிலதிபர் இரண்டு வயாகரா மாத்திரைகள் எடுத்துக்கொண்டது தெரியவந்தது.

மேலும், அதன் பின்னர் இருவரும் மதுவும் அருந்தி இருவரும் நெருக்கமாக இருந்தபோது அவருக்கு மயக்கம் ஏற்பட்டு சரிந்துள்ள தகவல் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின்னர் வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், மது மற்றும் வயாகரா மருந்து கலவையால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அவர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தொழிலதிபருடன் இருந்த பெண்ணை போலீசார் விடுதலை செய்தனர். மேலும், மருத்துவர்கள் அறிவுரை இன்றி செகஸ் ஆற்றலை அதிகரிக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் மருத்துவர்கள் சார்பில் அறிவுறுத்தபட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com