

மும்பை,
மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டம் சீரடியில் உள்ள சாவ்லி விகிர் தொழிற்பேட்டையில் நிறுவப்பட்ட பீரங்கி குண்டு உற்பத்தி ஆலையை பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து இந்திய ராணுவத்திற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'சூர்யாஸ்திரா' (Suryastra) ராக்கெட் லாஞ்சர் அமைப்பின் முதல் பகுதியையும் ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அந்த நிகழ்வில் பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், “இந்தியா ஒரு காலத்தில் பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் நாடாக அறியப்பட்டது, ஆனால் வரும் ஆண்டுகளில், பாதுகாப்பு பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக உருவெடுக்கும்” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மரட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், தொழில்துறை மந்திரி உதய் சமந்த், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், நிபே குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கணேஷ் நிபே, டி.ஆர்.டி.ஓ தலைவர் சமீர் வி. காமத் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.