தரிகெரே டவுனில் காரில் மாட்டிறைச்சி கடத்தியவர் கைது

தரிகெரே டவுனில் காரில் மாட்டிறைச்சி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
தரிகெரே டவுனில் காரில் மாட்டிறைச்சி கடத்தியவர் கைது
Published on

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே டவுன் பகுதியில் மாட்டிறைச்சி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தரிகெரே டவுன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மாட்டிறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர் பீரூரை சேர்ந்த சான் பாஷா என்பதும், அவர் தரிகெரேயில் இருந்து பீரூருக்கு மாட்டிறைச்சி கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 93 கிலோ மாட்டிறைச்சி, கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தரிகெரே டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிக்கமகளூரு பகுதியில் கடந்த சில நாட்களாக மாட்டிறைச்சி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கக்கோரி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com