பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதி சகோதரர், மருமகனுக்கு முக்கிய பதவி

பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதி சகோதரர், மருமகனுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதி சகோதரர், மருமகனுக்கு முக்கிய பதவி
Published on

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார், அக்கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும், மருமகன் ஆகாஷ் ஆனந்த் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

லக்னோவில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், அம்ரோகா தொகுதி எம்.பி. டேனிஷ் அலி மக்களவை கட்சி தலைவராகவும், நகினா எம்.பி. கிரிஷ் சந்திரா கொறடாவாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com