அறிவியல் வளர்ச்சியில், புதுமையை மேம்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது - பிரதமர் மோடி

அறிவியல் வளர்ச்சியில், புதுமையை மேம்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அறிவியல் வளர்ச்சியில், புதுமையை மேம்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்களுக்கான வைபவ்' என்ற பெயரில் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பின்னர் பேசிய பிரதமர் மோடி பேசியதாவது:-

* உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் பலர் தங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்கினர். அணு சக்தியை அதிகரிக்க புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. பல வரலாற்று கேள்விகளுக்கு விஞ்ஞானத்தின் மூலமாக விடை கிடைத்துள்ளது. பூஜ்ஜியத்தை பற்றி பேசும் போது, உலகம் முழுவதும் இந்தியாவை பற்றி பேசும்.

இந்தியாவின் பண்டைய வரலாறு என்பது பல விஞ்ஞானிகளை கொண்டுள்ளது. சுயசார்பு இந்தியாவை உருவாக்க விஞ்ஞான ரீதியாக பல முயற்சிகளை செய்து வருகிறோம். விண்வெளித்துறையில் அன்மையில் பல புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. உலகளவில் இந்திய தூதுவர்கள், இந்தியாவின் மதிப்பை எடுத்து கூறுகின்றனர். பல நல்ல கருத்துகளை வழங்கியதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. மனிதனின் வளர்ச்சிக்கு விஞ்ஞானம் அடிப்படை. இந்திய அரசின் முக்கிய குறிக்கோளே சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்துவது தான் .

அறிவியல் வளர்ச்சியில், புதுமையை மேம்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 2014இல் பல்வேறு தனித்துவமான தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டன. 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும். 25 புதிய தொழில்நுட்ப மையங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேளாண் துறை விஞ்ஞானிகள் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com