அயோத்தி ராமர் கோவிலில் கடந்த 11 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்

அயோத்தி ராமர் கோவிலுக்கு இதுவரை ரூ.11½ கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் கடந்த 11 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்
Published on

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் அயோத்தி நகரில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 22-ந் தேதி நடந்தது. அதை தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில் கடந்த 11 நாட்களில் சுமார் 25 லட்சம் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்துள்ளதாக கோவில் அறக்கட்டளை அறிவித்துள்ளது. மேலும் பக்தர்களிடம் இருந்து காணிக்கை மற்றும் நன்கொடையாக இதுவரை ரூ.11 கோடி கிடைத்துள்ளதாகவும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கோவிலில் வைக்கப்பட்டுள்ள நன்கொடை பெட்டிகளில் இருந்து ரூ.8 கோடி ரொக்கமாக கிடைத்ததாகவும், காசோலை மட்டும் ஆன்லைன் மூலம் ரூ.3 கோடியே 50 லட்சம் கிடைத்ததாகவும் அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com