

புனே,
நாட்டில் கொரோனா 2வது அலையில் முதல் அலையை விட பாதிப்புகள் அதிகரித்து காணப்பட்டன. 2வது அலையில் அதிகம் பாதித்த மாநிலங்களில் மராட்டியமும் ஒன்று. இந்தியாவில் மராட்டியம், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கூறும்போது, பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட்டம் நடத்துவது பற்றி வருத்தம் தெரிவித்து உள்ளார். அனைத்து கட்சிகளும் கூட்டம் கூடாமல் தவிர்க்கும்படியும், அரசியல் கூட்டங்கள் எதனையும் நடத்த வேண்டாம் என அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
மராட்டிய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்தியில், மராட்டியத்தில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் உள்ளது என தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு மற்றும் சுகாதார துறையின் பல்வேறு நடவடிக்கைகள் ஆகியவற்றால் இது சாத்தியப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.