

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துபவர்களின் வசதிக்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கோவின் என்ற இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ளோர் இந்த இணையதள பக்கத்தில் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த இணையதள பக்கத்தில் தடுப்பூசி போடப்படும் இடம், நேரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த இணையதள பக்கம் தடுப்பூசி மையத்தில் கூட்ட நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க வழிவகுக்கிறது.
இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் தடுப்பூசி மையங்களுக்கே நேரடியாக சென்று அங்கு பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
இந்த நிலையில், தடுப்பூசி முன்பதவிற்காக பயன்படுத்தப்படும் இந்த இணையதளத்தில் தமிழ் மொழி தவிர ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், கோவிண் இணைய தள வசதி படிப்படியாக வசதிகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் பல்வேறு மாநில மொழிகள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டுவருகிறது, ஆதலால் அடுத்த இரண்டு நாட்களில் தமிழ்மொழி சேர்க்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.