பி.எம்.கேர் நிதியில் அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் தயாரிப்புக்கூடம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு

பி.எம்.கேர் நிதியில் அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் தயாரிப்புக்கூடத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பி.எம்.கேர் நிதியில் அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் தயாரிப்புக்கூடம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் விப்லவ் சர்மா தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பி.எம்.கேர் நிதியைக் கொண்டு உடனடியாக கொரோனா தடுப்பூசிகள் வாங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இந்நிதியைக் கொண்டு நாட்டின் 738 மாவட்டங்களிலும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தயாரிப்புக்கூடத்தையும், செறிவூட்டி நிலையங்களையும் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.

அனைத்து தனியார் மற்றும் அறக்கட்டளைகள் சார்பில் நடத்தப்படும் ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் தயாரிப்புக்கூடத்தை அமைக்க மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

அனைத்து நகரங்களிலும் மின் மயானங்களை ஏற்படுத்தவும், ஏற்கனவே உள்ள மின் மயானங்களை பராமரிக்கவும் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

தொகுதி மேம்பாட்டு நிதியை வெளிப்படைத்தன்மையுடன் செலவிட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com