புதையல் ஆசையில்... லிப்ட் கொடுப்பதுபோல நடித்து செருப்பு தைப்பவரை நரபலி கொடுத்த கொடூரம்


புதையல் ஆசையில்... லிப்ட் கொடுப்பதுபோல நடித்து செருப்பு தைப்பவரை நரபலி கொடுத்த கொடூரம்
x

புதையல் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு ஆணை நரபலி கொடுக்க வேண்டும் என ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் பரசுராம்புராவை சேர்ந்தவர் பிரபாகர். இவர் அப்பகுதியில் செருப்பு தைக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய பிராபகருக்கு லிப்ட் குடுப்பதாக ஒரு மர்ம நபர் தன்னுடன் அழைத்துச்சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் நரபலி கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் புதையல் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு ஆணை நரபலி கொடுக்க வேண்டும் என ராமகிருஷ்ணா என்கிற ஜோதிடர் ஆனந்த ரெட்டியிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சாலையில் சென்றுகொண்டிருந்த பிரபாகருக்கு, ஆனந்த் ரெட்டி தனது பைக்கில் லிப்ட் கொடுத்துள்ளார். பின்னர் அவரை நரபலி கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இந்த கொடூர செயலை செய்த ஆனந்த் ரெட்டி மற்றும் ஜோதிடரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த காலத்திலும் இதுபோன்ற நரபலிகள் நடப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story