சபரிமலை சன்னிதானத்தில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது

சபரிமலை சன்னிதானத்தில் வைத்து இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.
சபரிமலை சன்னிதானத்தில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது
Published on

திருவனந்தபுரம்:

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.

கடந்த 2019-க்கான ஹரிவராசனம் விருதை பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. இந்தநிலையில் 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்க்பட்டது.

இன்று சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

இதே நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு வணக்கத்துக்குரிய இசைஞானி என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

ஹரிவராசனம் விருது பாடகர் கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், கே.எஸ்.சித்ரா உள்ளிட்டோருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com