விமான நிறுவனங்களின் பாணியில் ரெயில்களில் காலியிடத்தை பயணிகள் பார்க்கலாம் புதிய வசதி விரைவில் அறிமுகம்

விமான நிறுவன இணையதளங்களில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, அந்த நிறுவனத்தின் விமானங்களில் உள்ள இருக்கை அமைப்பு படமாக காட்டப்படுகிறது.
விமான நிறுவனங்களின் பாணியில் ரெயில்களில் காலியிடத்தை பயணிகள் பார்க்கலாம் புதிய வசதி விரைவில் அறிமுகம்
Published on

புதுடெல்லி,

அதில், முன்பதிவு செய்த இருக்கைகளும், காலி இடங்களும் வெவ்வேறு நிறங்களில் வேறுபடுத்தி காட்டப்படுகிறது. அதை பார்த்து, பயணிகள் தங்கள் வசதிக்கேற்ற இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே பாணியில், ரெயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத இருக்கைகளை பயணிகள் பார்த்துக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக முன்பதிவு நிலவரத்தை வெளியிட ரெயில்வே தகவல் சேவை மையத்தின் உதவியுடன் ஏற்பாடு செய்யுமாறு ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது, காத்திருப்பு பட்டியல் டிக்கெட் பெற்ற பயணிகள், காலியிடங்களை அறிந்து கொள்ள டிக்கெட் பரிசோதகரையே நாட வேண்டி உள்ளது. காலியிட விவரங்களை பார்த்துக்கொள்ளும் வசதியை செய்தால், தாங்களே அதை முன்பதிவு செய்து விடுவோம் என்று பயணிகள் பலர் யோசனை தெரிவித்தனர். அதை கருத்தில்கொண்டு, இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com