வரும் சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில், பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்; நளின் குமார் கட்டீல் உறுதி

கர்நாடகத்தில், வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என நளின் குமார் கட்டீல் கூறியுள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில், பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்; நளின் குமார் கட்டீல் உறுதி
Published on

மங்களூரு;

பிரதமர் மோடி

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் நளின் குமார் கட்டீல் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மங்களூருவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்கு வேண்டிய பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அடுத்த ஆண்டு (2023) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் உத்வேகத்தை பிரதமரின் வருகை ஏற்படுத்தி உள்ளது. அவரது தலைமையிலான மத்திய அரசு இந்தியாவை உலக நாடுகள் உற்று பார்க்கும் அளவிற்கு மாற்றி உள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசின் வளர்ச்சி பணிகளின் எதிரொலியாக வரும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும். இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோரின் ஆட்சியில் நடத்தப்பட்ட சாதனைகள் உந்துகோலாக இருக்கும்.

150 இடங்களில்..

இதன் மூலம் 150 இடங்களில் எங்கள் கட்சி வெற்றி பெற்ற ஆட்சியை பிடிக்கும். தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. இதை அவர்கள் மூடி மறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அது வெளிப்படையாக அனைவருக்கும் தெரியவரும். காங்கிரசின் இந்த நிலை, பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும்.

தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குறை கூறி வருகின்றனர். அவர்கள் பா.ஜனதாவுக்கு எதிராக பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். தலப்பாடி-எஜமாடி 4 வழி சாலை பணிகள் நிறைவடைந்துவிட்டது.

மேலிடம் முடிவு செய்யும்

பி.சி.ரோடு-அட்டஒளே பணிகள் நடைபெற்று வருகிறது. பிக்கர்னகட்டா-சனூர் 4 வழி சாலை பணிகள் தற்போது தான் தொடங்கி உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

பா.ஜனதா கட்சியில் யாரும் பதவியை எதிர்பார்ப்பது கிடையாது. மாநில பா.ஜனதா தலைவராக யார் இருக்க வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com