

அலிகார்,
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் அருகே கார்சியா பகுதியில் ஒரு வியாபாரி திருட்டுத்தனமாக நாட்டு சாராயம் காய்ச்சினார்.
அதை வாங்கிக்குடித்த 2 பேர் இறந்து விட்டதாக லோதா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இருவரும் சரக்கு வாகன டிரைவர்கள் ஆவர்.போலீசார் அங்கு சென்றபோது, கார்சியா மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மேலும் 9 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்திருப்பது தெரிய வந்தது.
மயங்கிய நிலையில் கிடந்த சிலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்ககூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.