உத்தர பிரதேசத்தில் இன்று 6,725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உத்தர பிரதேசத்தில் தற்போது 1,16,434 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் இன்று 6,725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 6,725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 238 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,588 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 13,590 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,16,508 ஆக அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் தற்போது 1,16,434 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக உத்தர பிரதேச சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com