

கோரக்பூர்,
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ராஜ்காட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குப்தா. வியாபாரியான இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கடன் தொல்லை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இவர், நேற்று தனது மனைவிக்கும், மகன் மற்றும் 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்தார். இதனால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர், ரமேஷ் குப்தா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.