விமான பயணத்திற்கு முகக்கவசம் கட்டாயமில்லை - விமான போக்குவரத்து அமைச்சகம்

விமானப்பயணத்தின் போது முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமான பயணத்திற்கு முகக்கவசம் கட்டாயமில்லை - விமான போக்குவரத்து அமைச்சகம்
Published on

புதுடெல்லி,

சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்களிலும் கட்டாய முகக்கவச உத்தரவு தளர்த்தப்படுவதாகவும் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் விமானப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து விமான பயணிகளும் முகக்கவசம் அணிவது விரும்பத்தக்கது என்று மட்டுமே அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பயணிகளும் முகமூடி/முகக் கவசங்களைப் பயன்படுத்துவது சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com