மேற்கு வங்காளம்: தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி

மேற்கு வங்காளத்தில் நிகழ்ந்த தீ விபத்தில், குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு வங்காளம்: தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் புருலியா மாவட்டம் மகாதெப்பூர் கிராமத்தில் பனை ஓலைகள், தார்ப்பாய், மரக்கிளைகள் மூலம் கூடாரம் அமைத்து பனைத்தொழிலாளர் குடும்பத்தினர் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த கூடாரத்தில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென கூடாரம் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ பரவி தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீதும் எரியத்தொடங்கியது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அனைவரும் அலறி துடித்தனர். இருப்பினும், 4 குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com