மேற்கு வங்கத்தில் நேற்று 726 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

மேற்கு வங்கத்தில் தற்போது 9,167 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நேற்று 726 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மேற்கு வங்கத்தில் நேற்று 717 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,45,534 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,402 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 726 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,17,965 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 9,167 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com