ஈவ் டீசிங்கிற்கு ஆளான பெண் மத்திய அமைச்சர் ; காரை பின் தொடர்ந்து கேலி செய்த 3 பேர்

உத்தரபிரதேசத்தில், மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் ஈவ் டீசிங்கிற்கு ஆளனார். காரை பின் தொடர்ந்து 3 பேர் கேலி செய்தனர். #AnupriyaPatel
ஈவ் டீசிங்கிற்கு ஆளான பெண் மத்திய அமைச்சர் ; காரை பின் தொடர்ந்து கேலி செய்த 3 பேர்
Published on

வாரனாசி

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் உத்தரபிரதேசத்தில் ஆரை மற்றும் மிர்சாமூர் பகுதிகளில் காரில் பயணம் செய்தார். படேல் அவரது லோக் சபா தொகுதியான மிர்சாபூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் வாரணாசிக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் வந்த 3 பேர் அவரது காரை முந்த முயன்றனர். அவர்கள் உடனடியாக மத்திய அமைச்சரின் பாதுகாவலர்களால் எச்சரிக்கப்பட்டனர்.

ஆனால் காரில் வந்தவர்கள் பாதுகாவலர்களின் எச்சரிக்கையை கண்டு கொள்ளவில்லை. மத்திய அமைச்சருக்கு எதிரான அநாகரீகமான கருத்துக்களை பேசி பாதுகாப்புப் படையினருடன் தவறாக நடந்து கொண்டனர்.

இது குறித்து மத்திய அமைச்சர் வாரணாசியில் எஸ்.எஸ்.பி. ஆர்.கே.பர்தாஜுக்கு மந்திரி புகார் அளித்தார். உடனடியாக போலீசார் வாகனத்தில் வந்தவர்களை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த மூவரும் இப்போது மிர்சாமூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத் 2017 இல் உத்திரப்பிரதேச முதலமைச்சராக பதவியேற்ற பிறகு , பெண்களுக்கு பாதுகப்பு வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ரோமியோ எதிர்ப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், பாதி ஆண்டுகளில் அது மாறிவிட்டது தெரிகிறது.

ஏப்ரல் 2017 ல், டெல்லி பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி காரை பின் தொடர்ந்து கேலிசெய்ததாக கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com