ரெயிலில் சக பயணிகள் மீது தீ வைத்த சம்பவம் - 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
ரெயிலில் சக பயணிகள் மீது தீ வைத்த சம்பவம் - 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Published on

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீ மளமளவென எரிவதை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை, என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், சிவப்பு சட்டை மற்றும் தொப்பி அணிந்த நபர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேரில் பார்த்தவர்கள் மற்றும் சிசிடிவி காட்சி அடிப்படையில் தீ வைத்த நபரின் மாதிரி உருவப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து ரெயில் பயணி ஷஜிஷா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தீ வைத்த நபர் மீது கொலை முயற்சி, மரணத்தை உண்டாக்கும் வகையிலான பொருளை பயன்படுத்துவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கோழிக்கோடு ரெயில் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட மர்ம நபரின் செல்போனில் இருந்து கடைசியாக மார்ச் 30ம் தேதி அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com