

புதுடெல்லி,
201617 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்று ( கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏராளமானோர் தங்கள் வருமான வரி கணக்குகளை வருமான வரித்துறை அலுவலகங்களில் நேரிலும், நேரில் தாக்கல் செய்ய இயலாதவர்கள் இணையதளம் வாயிலாகவும் தாக்கல் செய்து வருகின்றனர்.
ஒரே நேரத்தில் பலர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததால் கணிணி சர்வர்கள் முடங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.