வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு


வருமான வரி  கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
x

வருமான வரித்துறை கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் வரும் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.

புதுடெல்லி,

வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 ஆம் தேதியுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், அவகாசத்தை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் வருமான வரித்துறை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் கால அவகாசம் நீட்டிப்பு குறித்த விரிவான தகவல்கள் இடம் பெற்று இருக்கும் எனத்தெரிகிறது.

1 More update

Next Story