

புதுடெல்லி,
மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகள் நாள்தோறும் உச்சமடைந்து அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆமதாபாத்-மும்பை சென்டிரல்-ஆமதாபாத் செல்ல கூடிய தேஜஸ் ரெயில் சேவை ஒரு மாத காலத்திற்கு தற்காலிக ரத்து செய்யப்படுகிறது என ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்து உள்ளது.
இதுபற்றி வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒன்றில், சமீபத்திய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வால் ஆமதாபாத்-மும்பை சென்டிரல்-ஆமதாபாத் செல்ல கூடிய தேஜஸ் ரெயில் சேவை தற்காலிக ரத்து செய்யப்படுகிறது.
அதிகரிக்கும் பாதிப்புகள் மற்றும் அதிக அளவிலான மக்களின் விருப்பம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு ஏப்ரல் 2ந்தேதியில் இருந்து இந்த ரெயில் சேவையை ஒரு மாத காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ரெயில் பயணிகளுக்கு உயர்ந்த தரத்துடன் கூடிய பாதுகாப்பான மற்றும் வசதியான பயணம் அமைவதற்கு உறுதிப்படுத்தும் முயற்சியில் ஐ.ஆர்.சி.டி.சி. ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்து உள்ளது.