

போபால்,
மராட்டியத்தில் 25,833 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மராட்டியத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,96,340 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 21,75,565 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மராட்டியத்தில்
அதிகரித்துள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் இருந்து மராட்டியத்திற்கு செல்லும் பேருந்து போக்குவரத்துக்கு வருகிற 20ந்தேதி முதல் இந்த மாத இறுதி வரை (மார்ச் 31) தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது என மத்திய பிரதேச போக்குவரத்து கழகம் இன்று அறிவித்து உள்ளது.