

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 105.04 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 563 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 929 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு இருந்தது. இதுபோல கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,269.21 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,039 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டு இருந்தது.
இதன் மூலம் நேற்று இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3,429 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2 ஆயிரத்து 849 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று அது சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.