டெல்லியில் அதிகரித்த காற்று மாசு; கோவா சென்றார் சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி காற்று மாசால் கோவாவுக்கு சென்றடைந்தனர்.
டெல்லியில் அதிகரித்த காற்று மாசு; கோவா சென்றார் சோனியா காந்தி
Published on

பனாஜி,

டெல்லியில் சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதேபோன்று காற்று மாசு அளவும் அதிகரித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி டெல்லியிலுள்ள கங்கா ராம் மருத்துவமனையில் இந்த ஆண்டு ஜூலை 30ந்தேதி சேர்க்கப்பட்டார்.

இதன்பின்பு கடந்த ஆகஸ்டில் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று சென்ற பின்னர், தீவிர மருத்துவ சிகிச்சைகள் அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூட கலந்து கொள்ளாமல் அவரது மகன் ராகுல் காந்தியுடன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார்.

டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசால் மார்பு தொற்று ஏற்பட்டு கடுமையாக அவர் அவதிப்பட்டு உள்ளார். இதனால், தலைநகர் டெல்லியில் வசித்து வந்த சோனியா காந்தியை, அவரது உடல்நலத்திற்காக ஒரு சில நாட்கள் நகரை விட்டு வெளியேறும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனை முன்னிட்டு சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் கோவாவுக்கு இன்று சென்றடைந்தனர். கடந்த ஆண்டு சில காலம் கோவாவில் தங்கியிருந்த சோனியா காந்தி சைக்கிள் ஓட்டிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகின.

X

Daily Thanthi
www.dailythanthi.com