

சித்தூர்,
இதுகுறித்து சித்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் விஸ்வநாத் நிருபர்களுக்கு பட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தினமும் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகிறார்கள்.
தாற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் கொரோனா தொற்று பரவி கொண்டே இருக்கிறது.
மேலும் பொதுமக்கள், வணிகர் சங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை அனைத்துக் கடைகளும், வணிக வளாகங்களும், ஓட்டல்களும் செயல்படும். பின்னர் 1 மணிக்கு மேல் இரவு முழுவதும், மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்களும், வணிகர்களும், கடை உரிமையாளர்களும், ஓட்டல் உரிமையாளர்களும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். மதியம் 1 மணிக்கு மேல் யாரேனும் கடைகள், வணிக நிறுவனங்களை திறந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அபராதம் விதித்து, வழக்குப்பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.