கொரோனாவுக்கு பின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.மில் அதிகரித்த மாணவர் தற்கொலைகள்; புள்ளி விவரம் வெளியீடு

நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவலின்போது பின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.மில் மாணவர் தற்கொலைகள் செய்வது குறைந்து இருந்தது என அரசு தகவலில் இருந்து தெரிய வந்து உள்ளது.
கொரோனாவுக்கு பின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.மில் அதிகரித்த மாணவர் தற்கொலைகள்; புள்ளி விவரம் வெளியீடு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மேலவையில் மத்திய கல்வி இணை மந்திரி சுபாஸ் சர்க்கார் இன்று அளித்த எழுத்துப்பூர்வ பதில் ஒன்றில், நாட்டின் முன்னணி கல்வி மையங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆகியவற்றில் கடந்த 2022-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 2 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகரித்து உள்ளது என தெ உ.

2022-ம் ஆண்டில் இந்த மாணவர் தற்கொலை எண்ணிக்கை, 2019-ம் ஆண்டில் இருந்த எண்ணிக்கைக்கு இணையாக 16 ஆக உள்ளது. அவர்களில் 8 பேர் ஐ.ஐ.டி.யை சேர்ந்தவர்கள். 7 பேர் என்.ஐ.டி. மாணவர்கள். ஒருவர் ஐ.ஐ.எம். மாணவர் ஆவார் என தெரிய வந்து உள்ளது.

எனினும், இந்த புள்ளி விவரங்களின்படி, 2020-ம் ஆண்டில் 5 தற்கொலைகளும், 2021-ம் ஆண்டில் 7 தற்கொலைகளும் நடந்து உள்ளன.

கொரோனா பெருந்தொற்று பரவலின்போது வகுப்புகள் சீராக நடைபெறாத நிலையில், இந்த தற்கொலைகள் குறைந்து காணப்பட்டு உள்ளன. மாணவர்களும் அதிக நேரம் வீடுகளில் செலவிட்டு வந்தனர்.

இந்த எண்ணிக்கை அதிகரிப்பு கவனத்திற்குரிய விசயம் என்பதுடன், கல்வி தொடர்புடைய அழுத்தம், குடும்ப விவகாரங்கள், தனிப்பட்ட காரணங்கள் மற்றும் மனநல விவகாரங்கள் ஆகியவை முதன்மை காரணங்களாக இருக்க கூடும் என்று அரசு தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com