வான்வெளி தாக்குதல்களை தடுக்க டெல்லி செங்கோட்டையில் கண்காணிப்பு தீவிரம்

வான்வெளி தாக்குதல்களை தடுக்கும் வகையில் டெல்லி செங்கோட்டையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Image Courtacy:PTI
Image Courtacy:PTI
Published on

புதுடெல்லி,

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திரே மோடி தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதையொட்டி செங்கோட்டையை சுற்றிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி காவல்துறை செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக செங்கோட்டையில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் பட்டம், டிரோன், ராட்ச பலூன் உள்ளிட்டவற்றை பறக்க விட ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பட்டம், டிரோன், ராட்ச பலூன் உள்ளிட்ட பறக்கும் பொருட்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பதற்றம் நிறைந்த பகுதிகளில் உயரமான இடங்களில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com