

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 65,12,14,767 கோடியை தாண்டியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக தரவுகளின் படி, நாடு முழுவதும் இதுவரை 65.12 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,04,42,184 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 65,12,14,767 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
அதில், 18 முதல் 44 வயதுடையோருக்கு 25,32,89,059 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 2,85,62,650 பயனாளிகள் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் இன்று பெற்றுள்ளனர்.
45 முதல் 59 வயதுடையோருக்கு 13,16,49,547 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 5,49,49,421 பயனாளிகள் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.
60 வயதுடையோருக்குமேல் 8,72,83,530 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 4,51,83,531 பயனாளிகள் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.