அணு ஆயுதங்களை இந்தியா பெருக்கி வருகிறது - சர்வதேச அமைப்பு தகவல்..!

அணு ஆயுதங்களை இந்தியா பெருக்கி வருவதாக சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம் ANI
கோப்புப்படம் ANI
Published on

புதுடெல்லி,

சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில், சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது.

அந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, இந்தியாவிடம் 156 அணு ஆயுதங்கள் இருந்தன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 160 அணு ஆயுதங்கள் உள்ளன. தனது அணு ஆயுதங்களை இந்தியா பெருக்கி வருவதுபோல் தோன்றுகிறது.

சீனாவிடம் கடந்த ஆண்டு இருந்ததுபோலவே 350 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 165 அணு ஆயுதங்களும் உள்ளன. சீனா புதிதாக 300 ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக செயற்கைகோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானும் தனது அணு ஆயுதங்களை அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com