மொரீஷியஸ் அருகே கடலில் கலந்த எண்ணெயை அகற்ற இந்தியா உதவி - 30 டன் கருவிகளை அனுப்பியது

மொரீஷியஸ் அருகே கடலில் கலந்த எண்ணெயை அகற்ற உதவியாக 30 டன் கருவிகளை இந்தியா அனுப்பியது.
மொரீஷியஸ் அருகே கடலில் கலந்த எண்ணெயை அகற்ற இந்தியா உதவி - 30 டன் கருவிகளை அனுப்பியது
Published on

புதுடெல்லி,

ஜப்பானை சேர்ந்த எண்ணெய் கப்பல் ஒன்று கடந்த மாதம் மொரீஷியஸ் கடல் பகுதியில் பவளப்பாறையில் மோதி உடைந்தது. இதனால் கப்பலில் இருந்த எண்ணெய் முழுவதும் கடலில் கொட்டியது. இதனால் மொரீஷியஸ் கடற்பகுதி முழுவதும் பெரும் மோசமடைந்தது. எனவே கடந்த வாரம் சுற்றுப்புறச்சூழல் அவசர நிலையை பிறப்பித்த பிரதமர் பிரவிந்த் ஜெகநாத், அந்த எண்ணெயை அகற்ற உகல நாடுகள் உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து கடலில் கொட்டிய எண்ணெயை அகற்றுவதற்கு 30 டன் தொழில்நுட்ப கருவிகளை விமானப்படை விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. மேலும் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த சிறப்பு அதிகாரிகள் 10 பேரும் அங்கு உதவிக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

மனிதாபிமான அடிப்படையிலும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகளுக்கு பேரிடரில் உதவுதல் மற்றும் இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் பிரதமர் மோடி கொண்டிருக்கும் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையிலும் இந்த உதவி அனுப்பப்பட்டு உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com