மேலும் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை ; தொடர்ந்து 275 செயலிகளுக்கு தடை விதிக்க திட்டம்

47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது மேலும் 275 செயலிகளுக்கு தடை விதிக்க திட்டமிட்டு உள்ளது.
மேலும் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை ; தொடர்ந்து 275 செயலிகளுக்கு தடை விதிக்க திட்டம்
Published on

புதுடெல்லி

இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த மாதம் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

ஜூன் மாதத்தில் தடைசெய்யப்பட்ட 59 சீன செயலிகளி குளோன்களாக((ஒரிஜினல் செயலியைப் போல இயங்கும் போலி) இருந்த 47 சீன செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட குளோன் பயன்பாடுகளில் டிக் டோக் லைட் மற்றும் கேம் ஸ்கேனர் அட்வான்ஸ் ஆகியவை அடங்கும்.

47 சீன 'குளோன்' செயலிகளை தடை செய்வதற்கான உத்தரவு வெள்ளிக்கிழமை (ஜூலை 24) வெளியிடப்பட்டது. சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான விதிகளை ஏற்கனவே கடுமையாக்கியுள்ள நேரத்தில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

மேலும், 275 சீன செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இந்த செயலிகளின் தகவல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இவற்றுக்கும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

செயலிகள் 'இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு எதிராக செயலிகள் ஈடுபட்டுள்ளன'

"இதுபோன்ற கவலைகள் நம் நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன என்பது சமீபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும் சில மொபைல் செய் தவறாகலிகளை பயன்படுத்துவது குறித்து பல அறிக்கைகள் உட்பட பல்வேறு புகார்கள்ள் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு வந்துள்ளது.இவைகள் இந்தியாவுக்கு வெளியே இருப்பிடங்களைக் கொண்ட சேவையகங்களுக்கு பயனர்களின் தரவை அங்கீகரிக்கப்படாத முறையில் திருடி மறைத்து அனுப்பு கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com