வங்காள தேசத்தில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை ஆதரிக்கிறது - இந்திய வெளியுறவுத்துறை

வங்காள தேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயமாகும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
வங்காள தேசத்தில் மாணவர் இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து போராட்டம் வன்முறை வெடித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தற்கு காரணமான மாணவர்கள் போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றிய ஷெரீப் உஸ்மான் ஹாடி இந்தியாவுக்கு எதிராக பேசி வந்தார். இதயடுத்து இந்திய தூதரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இளைஞர் தீபு சந்திர தாஸ் கொடூரமாக கொல்லப்பட்டார். மேலும் இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.
இந்தநிலையில் வங்காள தேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொலை செய்யப்பட்டார். ராஜ்பாரி மாவட்டம் பாங்ஷா பகுதியில் 29 வயதான அம்ரித் மொண்டர் என்ற சாம்ராட் என்பவர் சிலரால் அடித்து கொல்லப்பட்டார். இதற்கிடையே அம்ரித் மொண்டல் கொலைக்கு மதம் காரணம் அல்ல வங்காள தேச இடைக்கால அரசு தெரிவித்து உள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் மதம் தொடர்பானது அல்ல. மிரட்டி பணம் பறித்தல் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையது என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பத்தில் அனைவரும் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், வங்காள தேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயமாகும் என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு, உரிமைகள் உரிமைகளை உறுதி செய்வதற்கும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் வங்கதேச அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு, உரிமைகள் உரிமைகளை உறுதி செய்வதற்கும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் வங்காள தேச அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
சமீபத்தில் மைமென்சிங்கில் ஒரு இந்து இளைஞர் கொல்லப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். மேலும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இடைக்கால அரசின் ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான 2,900 க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் ஆதாரங்களால் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.






