கிழக்கு லடாக் எல்லையில் திட்டமிட்டபடி இந்திய - சீன படைகள் விலகல் - ராணுவ தலைமை தளபதி

கிழக்கு லடாக் எல்லையின் கோக்ரா - ஹாட்ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கிழக்கு லடாக் எல்லையில் திட்டமிட்டபடி இந்திய - சீன படைகள் விலகல் - ராணுவ தலைமை தளபதி
Published on

புதுடெல்லி,

இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே நடந்த 16-வது சுற்று பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கிழக்கு லடாக் எல்லையின் கோக்ரா - ஹாட்ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

லடாக்கிற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுவிட்டு டெல்லி திரும்பிய ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே கூறுகையில், இருநாட்டு படைகள் பின்வாங்குதல் செயல்முறை திட்டமிட்டபடி நடக்கிறது என்றார். முன்னதாக கிழக்கு லடாக்கின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை குறித்து பாண்டே விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

ஜம்மு காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு இரு நாடுகளும், எல்லையில் படைகளை குவித்தன. இதனால், லடாக் எல்லையில் கடந்த 2 ஆண்டுகளாக பதற்றமான சூழல் நிலவிவந்தது. இந்நிலையில், 16-வது சுற்று பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கிழக்கு லடாக் எல்லையில் யுத்த பதற்றத்தைத் தணிக்கும் வகையில் கோக்ரா - ஹாட்ஸ்பிரிங் எல்லையில் இந்தியா, சீனா படைகள் தங்களது ராணுவத்தினரை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படை விலகல் பணிகள் இன்றுடன் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com