இந்தியா- சீனா இடையே இன்று ஒன்பதாவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தை

இந்தியா- சீனா இடையே ஒன்பதாவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தை இன்று நடக்க உள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

லடாக் எல்லையில் பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் இந்தியாவுக்கும், சீன தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது. இதேபோன்ற சம்பவம் வடக்கு சிக்கிம் பகுதியிலும் நடந்தது. இதனைத்தொடர்ந்து லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து இருக்கிறது.

எல்லைப் பகுதியில் இந்திய வீரர்கள் வழக்கமான ரோந்து பணியை மேற்கொள்வதற்கும் சீனா இடையூறு செய்கிறது. இதைத்தொடர்ந்து, சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் அங்கு படைகளை அனுப்பி உள்ளது. இதனால் எல்லையில் பங்கோங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் ஆகிய பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த பதற்றத்தை தணிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் ஏற்கனவே பல முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். மேலும் மேஜர் ஜெனரல்கள் மட்டத்திலும் 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் உடன்பாடு ஏற்படாமல் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில் கிழக்கு லடாக்கில் எல்லை பதற்றங்களைத் தணிக்க இந்தியாவும், சீனாவும் ஒன்பதாவது சுற்று இராணுவப் பேச்சுவார்த்தைகளை இன்று நடத்த உள்ளன.

இதன்படி கிழக்கு லடாக்கில் நடந்து வரும் இராணுவ நிலைப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவும் சீனாவும் 9 வது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் லெவல் இராணுவ பேச்சுவார்த்தைகளை இன்று நடத்த உள்ளன.

முன்னதாக மூத்த தளபதிகள் கடைசியாக நவம்பர் 6-ம் தேதி சந்தித்தனர். தற்போது நடைபெற்று வரும் இராணுவ உரையாடல் எந்தவொரு முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கவில்லை. படைகளை வாபஸ் பெறுவதற்கான நிபந்தனைகளில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வேறுபாடுகள் இருப்பதால் இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com