2025-ல் இந்தியா-சீனா இடையேயான வர்த்தகம் ரூ.14.06 லட்சம் கோடி

இந்தியாவில் இருந்து சீனாவுக்கான ஏற்றுமதி 9.7 சதவீதம் அதிகரித்து உள்ளது.
2025-ல் இந்தியா-சீனா இடையேயான வர்த்தகம் ரூ.14.06 லட்சம் கோடி
Published on

புதுடெல்லி,

சீனாவில் புதிய வருடம் பிறக்க உள்ளது. இந்த வருடம் குதிரை ஆண்டு என்ற பெயரில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. இதனால், சீனாவில் குதிரை பொம்மைகள் வித வித அலங்காரத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. மக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

சீன புது வருட கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் இன்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சீனாவுக்கான இந்திய தூதர் சூ பெய்ஹாங் பேசும்போது, கடந்த வருடம் ஆகஸ்டில் டியான்ஜின் நகரில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜீ ஜின்பிங் இடையேயான சந்திப்பில் இருதரப்பு உறவு புதிய வளர்ச்சிக்கான அளவில் மாற்றம் பெற்றுள்ளது.

Also Read
மணிப்பூர்: பா.ஜ.க. மூத்த தலைவர் கேம்சந்த் சிங் புதிய முதல்-மந்திரியாகிறார்
2025-ல் இந்தியா-சீனா இடையேயான வர்த்தகம் ரூ.14.06 லட்சம் கோடி

இருதரப்பு வர்த்தகம் முந்தின ஆண்டுடன் ஒப்பிடும்போது 12 சதவீதம் அதிகரித்து, பொருளாதாரம் சார்ந்த விசயங்கள் வலுப்பெற்றுள்ளன. 2025-ம் ஆண்டில் இந்தியா-சீனா இடையே 15,560 கோடி அமெரிக்க டாலர் (ரூ.14 லட்சத்து 6 ஆயிரத்து 427 கோடி) அளவுக்கு இருதரப்பு வர்த்தகம் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவில் இருந்து சீனாவுக்கான ஏற்றுமதி 9.7 சதவீதம் அதிகரித்து உள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் உள்ள ஆற்றலின் முக்கியத்துவத்தை எடுத்து காட்டுகிறது என கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com