பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இந்தியாவால் உதவ முடியும் - தூதர்

பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இந்தியா உதவ முடியும் என்று அதன் தூதர் அல்ஹைஜா நம்பிக்கைத் தெரிந்தார்.
பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இந்தியாவால் உதவ முடியும் - தூதர்
Published on

புதுடெல்லி

செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்குமான உறவினால் இந்திய பாலஸ்தீன உறவு பாதிக்கப்படாது என்று உறுதியிருப்பதாக தெரிவித்தார்.

சென்ற முறை பாலஸ்தீன அதிபர் இந்தியா வந்தப்போது பிரதமர் மோடி தடுமாற்றமின்றி பாலஸ்தீன பிரச்சினையில் அதனை ஆதரிக்கும் என்று சொன்னதை சுட்டிக்காட்டினார்.

பாலஸ்தீனப் பிரச்சினையில் நாங்கள் எதிர்பார்ப்பது சாதகமானதொரு அணுகுமுறையையே. இந்தியாவும் பாஸ்தீனமும் நீண்ட நாள் நண்பர்கள். எங்களுக்குள் நல்ல உறவு இருந்தது. இஸ்ரேலிய ஊடகங்கள் என்ன எழுதுகின்றன என்பது பற்றி பாலஸ்தீனம் கவலைப்படவில்லை என்றார் தூதர்.

பாஸ்தீனத்தின் மீது இந்தியா தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளாத வரையில் எங்களுக்கு கவலையில்லை என்று கூறினார் அல்ஹைஜா. இந்தியா தங்கள் பிரச்சினையில் ஓர் மத்தியஸ்தராக இருப்பதில் உங்களுக்கு விருப்பமா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாத அவர் இந்தியாவின் சாதகமான அணுகுமுறையையே எதிர்பார்ப்ப்பதாக கூறினார்.

பொதுவாக இஸ்ரேல் அல்லது பாலஸ்தீனத்திற்குச் செல்லும் இந்திய முக்கியஸ்தர்கள் மற்றொரு நாட்டிற்கு செல்வது வழக்கம். இம்முறை மோடி இஸ்ரேலிற்கு மட்டுமே சென்றார். ஆனால் மோடி ஒரே நிலப்பரப்பில் இரு நாடுகள் என்கிற தீர்வை விரும்புகிறோம் என்று கூறினார். இதர நிலுவையிலுள்ள பிரச்சினைகளுக்கும் ஒப்புக்கொள்ளத்தக்க தீர்வை அடைய அனைவரும் முயலும்படி கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com