இந்தியா உங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது அல்ல; ராகுல்காந்திக்கு பாஜக பதிலடி

இந்தியா உங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது அல்ல. பிரதமர் மோடி எங்கும் போகமாட்டார் என்று பா.ஜனதா கூறியுள்ளது.
சம்பித்பத்ரா
சம்பித்பத்ரா
Published on: 

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று நடந்த 'இந்தியா' கூட்டணி பேரணியில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, "நரேந்திர மோடி எங்கும் போகமாட்டார். அவர் போக விரும்பினாலும் நாங்கள் விட மாட்டோம். அவர் சட்ட நடவடிக்கையை சந்திக்க வேண்டி இருக்கும். தப்பி விடலாம் என்று நினைக்கக்கூடாது" என்று கூறினார்.

அதற்கு பதில் அளிக்கும்வகையில், பா.ஜனதா தலைமையகத்தில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சம்பித்பத்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-பிரதமர் மோடி எங்கும் போகமாட்டார். அராஜகத்தை உண்டாக்கும் நோக்கத்தில் தேவையற்ற பிரச்சினைகளை ராகுல்காந்தி உருவாக்கிக் கொண்டிருக்கும் வரை அவர் எங்கும் போகமாட்டார்.

இந்தியர்களுக்கு சொந்தமானது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சட்டவிரோதமானது என்றும், சரியாக நடந் திருந்தால் மோடி பிரதமராகவோ, அமித்ஷா உள்துறை மந்திரியாகவோ ஆகியிருக்க முடியாது என்றும் ராகுல்காந்தி பேசியுள்ளார். இது, முகலாய பேரரசரின் பிள்ளைகள் பேசுவதுபோல் இருக்கிறது. இந்தியா உங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது அல்ல. இந்தியர்களுக்கு சொந்தமானது.

தந்திரம்

ராம்லீலா மைதானத்தில் 10 லட்சம்பேர் பங்கேற்பார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறினார். ஆனால் அதில் சிறிதளவுதான் வந் துள்ளனர். மைதானத்தில் காட்டப்பட்ட கூட்டம், தந்திரமான புகைப்படக்கலை. தந்திரத்தால் யாரும் பிரதமர் ஆக முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

X