

புதுடெல்லி
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.3 சதவீதம் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி மதிப்பீடு உள்நாட்டு தேவை மற்றும் திட்டங்களை அதிகரிப்பதற்காக பொது முதலீட்டின் அதிகரிப்பால் ஆதரிக்கப்படுகிறது.
அடுத்த வாரம் வாஷிங்டனில் தொடங்கும் அதன் வருடாந்திர கூட்டங்களுக்கு முன்னதாக தெற்காசிய பொருளாதார மைய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டு உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டாவது கொரோனா அலையால் பொருளாதாரம் பாதிக்கபட்ட போதிலும், 2020 ஆம் ஆண்டின் தாக்கத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தொற்றுநோயின் பொருளாதார தாக்கம் "ஒப்பீட்டளவில் குறைவானது" தான் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.