சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியா வியக்கத்தக்க அளவில் முன்னேற்றம் - பிரதமர் மோடி

உலக விமான போக்குவரத்து துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியா வியக்கத்தக்க அளவில் முன்னேற்றம் - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் சார்பில் 81வது ஆண்டு விழாக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது உலக விமானப் போக்குவரத்து உச்சிமாநாடு ஜூன் 1 முதல் 3 வரை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 42 ஆண்டுகளுக்கு முன்பு, 1983 இல் பொதுக் குழு கூட்டம் கடைசியாக நடைபெற்றது. இந்தநிலையில், இந்தநிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;

கடந்த சில ஆண்டுகளில் இந்தியா சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் வியக்கத்தக்க அளவில் முன்னேற்றத்தை கண்டுள்ளது.உலக விமான போக்குவரத்து துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. எங்கள் விமான நிறுவனங்கள் இரட்டை இலக்க விகிதத்தில் வளர்ந்து வருகின்றன. இந்தியாவில், ஆண்டுக்கு 240 மில்லியன் பயணிகள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பயணம் செய்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 500 மில்லியன் பயணிகளாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டில், இந்தியாவில் 96 எம்.ஆர்.ஓ (பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு) வசதிகள் இருந்தன, இன்று, இது 154 ஆக உள்ளது.2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 4 பில்லியன் டாலர் எம்.ஆர்.ஓ மையமாக மாற்றுவதே எங்கள் இலக்கு. ஐசிஏஓவின் சமீபத்திய பாதுகாப்பு தணிக்கை, விமானப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இந்தியாவின் முயற்சிகளை அங்கீகரித்துள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com